சென்னையின் முக்கிய சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீடியோ

தமிழகம்
Updated Jun 13, 2019 | 12:41 IST | Times Now

சென்னை மத்திய கைலாஷ் சாலையில் மீண்டும் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதால் தினசரி அந்த வழியாக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Road caved in Madhya Kailash junction in Chennai
Road caved in Madhya Kailash junction in Chennai  |  Photo Credit: Times Now

சென்னை: சென்னை, மத்திய கைலாஷ் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் மத்திய கைலாஷ் பிரதான சாலை முக்கியமானது. இந்த சாலையை கடந்து தான் ஓஎம்ஆர். ஈசிஆர், புதுச்சேரி, கடலூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்ணா பல்கலைக்கழகம், டைடல் பார்க், அடையாறு பகுதிகளுக்கும் இந்த சாலையின் வழியாக வாகனங்கள் செல்ல முடியும்.  எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் உள்ள சிக்னல் அருகே நேற்று நள்ளிரவு 12.30 அளவில் திடீரென சுமார் 5 அடி ஆழத்திற்குபள்ளம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் பாதுகாப்பிற்காக இந்த பள்ளத்தை சுற்றி பேரிகார்டுகளை அமைத்துள்ளனர். நள்ளிரவு என்பதால் விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் நேற்றிரவு முதலே பள்ளத்தை சரி செய்ய எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ஏற்கனவே கடந்த மே 27-ம் தேதி 8 அடி ஆழத்துக்கு இதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. அப்போது தற்காலிக சிமெண்ட் கொண்டு பள்ளத்தை சரி செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டே வாரங்களில் மீண்டும் அதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் தினசரி பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

NEXT STORY
சென்னையின் முக்கிய சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீடியோ Description: சென்னை மத்திய கைலாஷ் சாலையில் மீண்டும் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதால் தினசரி அந்த வழியாக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை