சீன அதிபா் - பிரதமா் மோடி விழாவில் பங்கேற்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி தரப்பு

தமிழகம்
Updated Oct 10, 2019 | 21:40 IST | Times Now

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என ரஜினி தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

PM Modi, Actor Rajinikanth
பிரதமர் மோடி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை வதந்தி என ரஜினி தரப்பு மறுத்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் நாளை, நாளை மறுதினம் இரு நாட்டு உறவு குறித்து சந்தித்துப் பேச உள்ளனர்.  இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க உள்ளனர். இதற்காக சீன அதிபர் நாளை நண்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வருகிறாா். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட்சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் மாலை 4 மணியளவில் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார்.

பிரதமர் மோடியும் சென்னைக்கு விமானம் மூலம் நாளை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். இருநாட்டு தலைவர்களும் அங்கு சந்தித்து பேசுகின்றனர். சீன அதிபர் தமிழகம் வருவதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், சென்னையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் விருந்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என ரஜினி தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் ரஜினியின் செய்தித்தொடர்பாளர் ரியாஸ் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

NEXT STORY
சீன அதிபா் - பிரதமா் மோடி விழாவில் பங்கேற்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி தரப்பு Description: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என ரஜினி தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு