ஆவின் பால் விலை உயர்வு; இன்று முதல் அமலுக்கு வந்தது

தமிழகம்
Updated Aug 19, 2019 | 09:24 IST | Times Now

மெஜந்தா நிற கவரில் உள்ள ஆவின் பால் 1 லிட்டர் ரூ.40, நீல நிற கவரில் உள்ள பால் 1 லிட்டர் ரூ.43, பச்சை நிற கவரில் உள்ள 1 லிட்டர் பால் ரூ.47, ஆரஞ்சு நிற கவரில் உள்ள பால் 1 லிட்டர் ரூ.51 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Aavin Milk, ஆவின் பால் பாக்கெட்
ஆவின் பால் பாக்கெட்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 லட்சத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இதன் காரணமாக அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, 500 மி.லி ஆவின் நைஸ் (நீலம்) பாலின் விலை ரூ.20 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.21.50 ஆகவும் விற்கப்படுகிறது. 500 மி.லி ஆவின் மேஜிக் பச்சை நிற கவர் பாலின் அட்டைதாரர்களுக்கு ரூ.22.50 ஆகவும், அதிகபட்சமாக ரூ.23.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  500 மி.லி. ஆவின் க்ரீம் பால் (ஆரஞ்ச்) அட்டைதாரர்களுக்கு ரூ.24.50 ஆகவும், அதிகபட்சமாக ரூ.25.50 ஆகவும் விற்கப்படுகிறது.

மெஜந்தா நிற கவரில் உள்ள பால் 1 லிட்டர் ரூ.40, நீல நிற கவரில் உள்ள பால் 1 லிட்டர் ரூ.43, பச்சை நிற கவரில் உள்ள 1 லிட்டர் பால் ரூ.47, ஆரஞ்சு நிற கவரில் உள்ள பால் 1 லிட்டர் ரூ.51 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...