நல்லக்கண்ணுவுக்கு வாடகையின்றி வீடு வழங்கப்படும் - ஓபிஎஸ் உறுதி

தமிழகம்
Updated Jul 18, 2019 | 17:02 IST | Times Now

நல்லக்கண்ணுவுக்கு விரும்பும் இடத்தில் வாடகையின்றி வீடு வழங்கும் என்றும் அது அரசின் கடமை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நல்லக்கண்ணு
நல்லக்கண்ணு  |  Photo Credit: Twitter

இன்று சட்டப்பேரவையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கக்கன் குடும்பத்தினரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களுக்கும் வாடகை இன்றி வீடு வழங்க அரசு தயாராக  உள்ளதாக கூறினார்.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நாகப்பட்டினத்தின் சட்டமன்ற உறுப்பினர் தமிமும் அன்சாரி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்படுமா என்றுக் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அரசியல்வாதியான கக்கனுக்கு 1971ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் மறைவுக்குப் பிறகும் 1987ஆம் ஆண்டு அவரது மகன்கள் பெயரில் வீடு ஒதுக்கப்பட்டு அவர்களும், நல்லக்கண்ணுவும் குடியுருப்புகளில் வசிந்துவந்தனர். நல்லக்கண்ணுவுக்கு 2007ஆம் ஆண்டுமுதல் அங்கே வாடகையில் வீடு ஒதுக்கப்பட்டது. 

இந்த குடியிருப்புகள் 1954ஆம் வருடம் கட்டப்பட்டது என்பதால் 2011ஆம் ஆண்டு பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட உயர்நீதிமன்றம் அவர்களை காலிசெய்யுமாறு என்று கூறிய நிலையில் நல்லக்கண்ணுவுடன் ஒரு 96 பேர் தாமாகவே வந்து காலிசெய்தனர். ஆனால் கக்கன் குடும்பத்தினர் அங்கேயேதான் வசித்து வருகிறார்கள். நானே நல்லக்கண்ணுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வீடு வழங்குவதாகத் தெரிவித்தேன். அவர்கள் இருவருக்கும் விரும்பும் இடத்தில் வாடகையின்றி வீடு வழங்கும் என்றும் அது அரசின் கடமை என்றும் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்று வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும் தெரிவித்தார். 
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...