சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு

தமிழகம்
Updated Jul 19, 2019 | 19:42 IST | Times Now

சட்டசபையில் 12-வது படமாக திறக்கப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்திற்கு கீழே 'வீரம், தீரம், தியாகம்' என எழுதப்பட்டுள்ளது. 

Ramasamy Padayachi, ராமசாமி படையாட்சியார்
ராமசாமி படையாட்சியார்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியாரின் உருவப் படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சுதந்திர போராட்ட வீரரும், காமராஜர் முதல்வராக இருந்த போது அவரின் அமைச்சரவையில் உள்ளாட்சி துறை அமைச்சராக பணியாற்றியவருமான ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைத்தார்.

பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராசர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், ஜெயலலிதா ஆகிய 11 பேரின் திருவுருவ படங்கள் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-வது படமாக ராமசாமி படையாட்சியார் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமசாமி படையாட்சியார் உருவப்படத்திற்கு கீழே 'வீரம், தீரம், தியாகம்' என எழுதப்பட்டுள்ளது. 
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...