ஜூலை 18ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

தமிழகம்
Updated Jun 25, 2019 | 18:15 IST | Times Now

அதிமுகவை சேர்ந்த வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், கே.ஆர்.அர்ஜூனன் மற்றும் திமுகவின் கனிமொழி, இ.கம்யூ டி.ராஜா ஆகியோரது பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

delhi, டெல்லி
மாநிலங்களவை தேர்தல்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைக்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் ஆறு பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 

அதிமுகவை சேர்ந்த வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், கே.ஆர்.அர்ஜூனன் மற்றும் திமுகவின் கனிமொழி, இ.கம்யூ டி.ராஜா ஆகியோரது பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 18ம் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்புமனு பரிசீலனை வருகின்ற ஜூலை 9ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 11. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ம் தேதியன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

அன்று மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY
ஜூலை 18ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! Description: அதிமுகவை சேர்ந்த வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், கே.ஆர்.அர்ஜூனன் மற்றும் திமுகவின் கனிமொழி, இ.கம்யூ டி.ராஜா ஆகியோரது பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
Loading...
Loading...
Loading...