ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு

தமிழகம்
Updated Jul 11, 2019 | 17:26 IST | Times Now

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

vaiko, P Wilson, M Shanmugam, Anbumani ramadoss, Mohammedjan, Chandrasekaran, வைகோ, வில்சன், சண்முகம், அன்புமணி ராமதாஸ், முஹம்மத் ஜான், சந்திரசேகரன்
வைகோ, வில்சன், சண்முகம், அன்புமணி ராமதாஸ், முஹம்மத் ஜான், சந்திரசேகரன்   |  Photo Credit: Twitter

சென்னை: மாநிலங்களவையில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு போட்டியிட்ட திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வரும் 18- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் சந்திரசேகரன், முஹம்மத் ஜான் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக ஆதரவுடன் பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 

திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டதால் அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்ததால் திமுக சார்பில் 4-வது வேட்பாளராக வழக்கறிஞர் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இவர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் நான்கு பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 11 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் சுயேட்சைகள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் இளங்கோவன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

NEXT STORY
ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு Description: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles