ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

தமிழகம்
Updated Nov 07, 2019 | 22:03 IST | Times Now

தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Perarivalan
பேரறிவாளன்  |  Photo Credit: ANI

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநா் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.  தந்தை குயில்தாசன் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை அன்று பேரறிவாளன் பரோலில் வெளியே வர இருக்கிறாா். கடந்த 2017 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு 2 மாதம் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY