அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் - வீடியோ, படங்கள்

தமிழகம்
Updated Aug 14, 2019 | 11:37 IST | Times Now

இன்று அதிகாலை 12:30 மணி அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

Rajinikanth worships kanchipuram Athivaradar
அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்  |  Photo Credit: Twitter

அத்திவரதரின் தரிசனம் இன்னும் 2 நாட்களில் முடியும் நிலையில் இன்று அதிகாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியோடு தரிசனம் செய்தார். 

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதரின் தரிசனம் நடைபெறுகிறது. இன்று அதிகாலை அதாவது 12:30 மணிக்கு மனைவி லதா மற்றும் உறவினர்களோடு ரஜினிகாந்த் அத்திவரதரைக் காண வந்தார். இன்னும் 2 நாட்களில் மீண்டும் அத்திவரதரை குளத்தில் இறக்கவிருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் இல்லாத சமயத்தில் வழிபாடு செய்வதற்காக வந்திருந்தாலும் ரஜினிகாந்த வந்த சமயத்திலும் மாபெரும் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் பாதுகாப்புப் பணிகளுக்காக போலிசார் குவிக்கப்பட்டு இருந்ததால் விவிஐபி நுழைவாயில் வழியாக ரஜினிகாந்த் விரைவில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார்.

 

 

 

Image

Image

Image

Image

இதற்கு முன்னால் லதா ரஜினிகாந்துடன் சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது மகன்களுடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. ஜுலை 1ஆம் தேதி அன்று துவங்கிய அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறதும். தற்போது தினமும் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

NEXT STORY
அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் - வீடியோ, படங்கள் Description: இன்று அதிகாலை 12:30 மணி அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...