உடையாளூர் ராஜராஜசோழன் சமாதி; தொல்லியல் துறை தீவிர ஆய்வு!

தமிழகம்
Updated Apr 22, 2019 | 14:59 IST | Times Now

ஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கட்டிடக்கலை, ஓவியக்கலை, நுண்கலைகள் யாவுமே சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. 

tanjore, தஞ்சாவூர்
ராஜராஜசோழன் சமாதி  |  Photo Credit: Twitter

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி எனச்சொல்லப்படும் இடத்தில் தொல்லியல்துறை அதிகாரிகள் இன்று ஆய்வைத் தொடங்கினர்.

தஞ்சையை ஆண்ட மாமன்னரான ராஜராஜசோழனின் சமாதி உடையாளூரில் அமைந்திருந்ததா என்பதற்கான தொல்லியல் துறை அடையாளங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில் இந்த ஆய்வினை துவங்கியுள்ளனர் தொல்லியல் துறையினர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கட்டிடக்கலை, ஓவியக்கலை, நுண்கலைகள் யாவுமே சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. 

இந்நிலையில் இத்தனை சிறப்புகள் பெற்ற, கட்டிடக்கலையை உலகாளவச் செய்த  ராஜராஜசோழனின் சமாதியானது உடையாளூர் என்ற கிராமத்தில் பராமரிப்பின்றி மேற்கூரை கூட இல்லாமல் சிதைந்து கிடக்கிறது. எனவே, அவரது சமாதி அமைந்துள்ள இடத்தில் மணிமண்டபம் அமைக்கவும், சிலை அமைக்கவும் உத்தரவிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு ராஜராஜ சோழன் சமாதி குறித்து மனுதாரர் மனுவில் குறிப்பிட்டது போல, உடையாளூரில் அமைந்திருக்கிறதா என்பதற்கு தொல்லியல் அடையாளங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து உடையாளூரில் தொல்லியல் துறை ஆய்வு துவங்கியுள்ளது.

 

NEXT STORY
உடையாளூர் ராஜராஜசோழன் சமாதி; தொல்லியல் துறை தீவிர ஆய்வு! Description: ஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கட்டிடக்கலை, ஓவியக்கலை, நுண்கலைகள் யாவுமே சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. 
Loading...
Loading...
Loading...