சென்னையின் பல்வேறு இடங்களில் மழை: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம்
Updated Jun 20, 2019 | 19:30 IST | Times Now

சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது.

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை  |  Photo Credit: Times Now

சென்னை: சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. மேலும், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கத்திரி வெயில் முடிந்தபின்பும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனல் காற்று வீசி வந்தது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். கடும் வெயில் காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரித்தது.

இந்நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை வானம் மேகத்துடன் காணப்பட்டது. வேளச்சேரி, கிழக்குக் கடற்கரை சாலை, தரமணி, துரைப்பாக்கம், கோவிலம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம். குரோம்பேட்டை, மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனிடையே, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்காற்று தரைப்பகுதியை நோக்கி வீசித் தொடங்கி உள்ளதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் மகிழச்சி அடைந்துள்ள மக்கள் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

NEXT STORY
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! Description: சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது.
Loading...
Loading...
Loading...