'ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சோ’ - சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மழை!

தமிழகம்
Updated Apr 22, 2019 | 19:04 IST | Times Now

சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் சட்டென்று வானிலை மாறி மழை பொழியத் துவங்கியது.

chennai city, சென்னை
மழை   |  Photo Credit: Getty Images

காஞ்சிபுரம்: சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று மதியத்திலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் காஞ்சிபுரத்தில் பெருமழை பெய்துவருவதால் மக்கள் குதூகலமாக உள்ளனர். 

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனையடுத்து பருவமழைப் பொய்ப்பால் சென்னையில் குடிநீர் பஞ்சமும் கடுமையாக தலைவிரித்து ஆடத்தொடங்கியது.

இந்நிலையில் வெயில் பல மாவட்டங்களில் 100 டிகிரியைக் கடந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் சில உள்மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. கன்னியாகுமரி, நெல்லை, ஊட்டி, பெரம்பலூர் மற்றும் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் மழை பொழிவு காணப்பட்டது. 

இந்நிலையில் இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் சட்டென்று வானிலை மாறி மழை பொழியத் துவங்கியது. மேலும், காஞ்சிபுரத்தில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழியத்துவங்கியது. 

இதனால் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் குளிர்ச்சி நிலவியது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சமூக வலைத்தள வாசிகள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 

NEXT STORY
'ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சோ’ - சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மழை! Description: சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் சட்டென்று வானிலை மாறி மழை பொழியத் துவங்கியது.
Loading...
Loading...
Loading...