தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகம்
Updated Sep 23, 2019 | 10:09 IST | Times Now

நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததைத் தொடர்ந்து இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain continues in Tamilnadu today
Rain continues in Tamilnadu today  |  Photo Credit: Getty Images

நேற்று சென்னையில் பரவலாக மழை பெய்ததைத் தொடர்ந்து இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கரூர், தஞ்சாவூர் , திருச்சி, தேனி, அரியலூர், திருவாரூர், சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், நாகை, தர்மபுரி, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று நல்ல மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியிலும் மிதமானது முதல் நல்ல மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

நேற்று அதிகபட்சமாக திண்டிவனம், வத்திராயிருப்பு, தேனி, ஆண்டிப்பட்டி, தருமபுரி ஆகிய இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக குற்றால அருவி, கன்னியாகுமரி திற்பரப்பு அருவிகளில் நல்ல தண்ணீர் வரத்து உள்ளது. மேலும் நேற்று சென்னையில் நண்பகல் முதல் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக வேளச்சேரி, கிண்டி, ஓ.எம்.ஆர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, அடையார், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது. 

NEXT STORY
தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் Description: நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததைத் தொடர்ந்து இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்