இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை: இன்றும் தொடரும்!

தமிழகம்
Updated Jul 22, 2019 | 10:39 IST | Times Now

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இதே போன்று இன்றும் நாளையும் விட்டுவிட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

chennai rain
chennai rain  |  Photo Credit: Getty Images

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. நேற்று போலவே இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஓ.எம்.ஆர், வடபழனி, அடையார், அண்ணா நகர், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், போன்ற இடங்களில் நல்ல மழையும், ஏனைய இடங்களில் சாரல் மழையும் பெய்தது. வெப்பசலனம் காரணமாகவும் தென்மேற்குப் பருவமழை காரணமாகவும் மழை பெய்து வருவதாக தெரிகிறது. 

மேல் அடுக்கு சுழற்சி  காரணமாக சென்னை மட்டுமல்லாமல்  வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இதே போன்று இன்றும் நாளையும் விட்டுவிட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை வலுப்பெற்று அணைகளில் நீர் நிரம்பி வழிகிறது. தென்மேற்குப் பருவ மழை காரணமாகவும் தமிழகத்தில் உள்ள கர்நாடகா, கேரளா எல்லைகளான தேனி, கோவை, நீலகிரி போன்ற இடங்களிலும் கனமழைப் பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப் படுத்தியுள்ளது அரசு. சுமார் 7 மாவட்டங்களில் வெள்ளி நிவாரண முகாம்கள் அமைத்து அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். மழையைப் பொருத்து வெள்ள நிவாரண முகாம்கள் அதிகரிக்கக்கூடும். கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

NEXT STORY
இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை: இன்றும் தொடரும்! Description: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இதே போன்று இன்றும் நாளையும் விட்டுவிட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...