நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பேராசிரியை நிர்மலா தேவி

தமிழகம்
Updated Oct 09, 2019 | 17:57 IST | Times Now

வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார்.

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார் நிர்மலா தேவி,Professor Nirmala Devi faints inside the court
நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார் நிர்மலா தேவி  |  Photo Credit: YouTube

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது இன்று நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மயங்கி விழுந்தார்.

கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவியும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கின் விசாரணைக்கு பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார்கள். இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார்.

Nirmala Devi

உடனே அங்கிருந்தவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயன்றனர். பின்னர் அங்கிருந்த பெண் காவலர்கள் நிர்மலா தேவியை மீட்டு வெளியே அழைத்து வர அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இம்மாதம் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்வத்தால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.      

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...