அத்தி வரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

தமிழகம்
Updated Jul 12, 2019 | 18:11 IST | Times Now

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர்.

President Ramnath Kovind
President Ramnath Kovind   |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் இன்று மாலை அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது.  கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று தனது மனைவி பிரேமலதாவுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் பார்த்திபன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோர் ஏற்கனவே அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

Athi varadar darshan

12-வது நாளான இன்று பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள அத்தி வரதர் காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில், அத்திவரதர் வைபவத்தைக் காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Athi varadar darshan

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர். தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்த குடியரசுத் தலைவர், கோவில் வரலாற்றையும் அத்திவரதர் வரலாற்றையும் கேட்டறிந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வருவாய்த்துறை அமைச்சர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரும் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

குடியரசுத் தலைவர் வருகையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குடியரசுத் தலைவர் வருகையால் சிறிது நேரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

NEXT STORY
அத்தி வரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் Description: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles