பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களிலேயே முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு

தமிழகம்
Updated Sep 12, 2019 | 11:10 IST | Times Now

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்தது.

Pongal train ticket reservation begins, பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்  |  Photo Credit: BCCL

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவுபெற்றது.

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை வழங்கப்படுகிறது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து பணி செய்வோர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி உறவினர்களுடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைப்பது பொங்கல், தீபாவளி உள்ளிட்ட சில பண்டிகைகளின் போது தான்.

இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்ததால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜனவரி 11, 12, 13 மற்றும் 14-ஆம் தேதிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு முறையே செப்டம்பர் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதே போல, பொங்கல் முடிந்து மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக ஜனவரி 19 மற்றும் ஜனவரி 20 ஆகிய தேதிகளுக்கான முன்பதிவு முறையே செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களிலேயே முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு Description: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles