தமிழகத்தில் சரியான தலைமைக்கான வெற்றிடம் நீடிக்கிறது - ரஜினிகாந்த்

தமிழகம்
Updated Nov 08, 2019 | 13:11 IST | Times Now

அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா்.

Actor Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த்  |  Photo Credit: ANI

சென்னை: அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா்.

நடிகா் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளா்களை சந்தித்து பேட்டியளித்தாா். அப்போது, திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியது போல என் மீது பாஜக சாயம் முயற்சி மேற்கொள்கிறார்கள் என்று கூறியிருந்தாா். இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன. அதேபோல், எனக்கு பாரதிய ஜனதா கட்சி சாயம் பூச ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. குறிப்பிட்ட சிலா் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். இது தற்போதைய அரசியலில் சகஜமான ஒன்றுதான். நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுவேன். எம்ஜிஆர் கூட கட்சி தொடங்கி முதல்வராகும் வரை திரைப்படங்களில் நடித்தாா். அதேபோல் அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்" என்று கூறினாா். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது குறித்த கேள்விக்கு, எனக்கு அது குறித்து தெரியாது என ரஜினிகாந்த் பதிலளித்தாா். அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கூறினாா். மேலும், அவர் பேசுகையில், தமிழகத்தில் சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது என்றார் ரஜினி.

NEXT STORY