சுஜித் மரணம்: ராகுல், மு.க.ஸ்டாலின், டிடிவி, விஜயகாந்த் இரங்கல்

தமிழகம்
Updated Oct 29, 2019 | 10:36 IST | Times Now

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

sujith wilson
சுஜித் வில்சன்  |  Photo Credit: Twitter

திருச்சி: குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

திருச்சி, மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை 82 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இன்று உயிரிழந்த நிலையில் அதிகாலை மீட்கப்பட்டது. 

மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பிறகு அமைச்சர்கள் குழந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னா் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை சரியாக 8.15 மணி அளவில் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனைச் செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சுஜித்தின் மறைவுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPSujith, #SujithWilson, #SorrySujith ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

சுஜித் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், கனிமொழி எம்.பி., தெலங்கானா ஆளுநா் தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ராகுல் காந்தி இரங்கல்:

 

 

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இரங்கல்:

 

 

 

 

பாமக நிறுவன தலைவா் ராமதாஸ் இரங்கல்:

 

 

 

 

 

 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்:

 

 

திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்:

 

 

 

 

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்:

 

 

 

 

 

 

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரங்கல்:

 

 

NEXT STORY