ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு: இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்கு

தமிழகம்
Updated Jun 11, 2019 | 18:05 IST | Times Now

சாதி, இனம், மொழி மூலம் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்  |  Photo Credit: Times Now

தஞ்சாவூர்: ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நடந்த கூட்டம் ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான். அதற்கு முக்கிய காரணம் நிலங்கள். அதன் அடிப்படையில் பல பிரச்சனைகள் நடந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான் இருண்டகாலம். 

சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறையை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். சாதியம் தலைத்தூக்கியதும் அப்போதுதான். மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம் என்று பேசினார். பா.ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

பா.ரஞ்சித்தின் இந்த பேச்சை கண்டித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக  இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாதி, இனம், மொழி மூலம் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

NEXT STORY
ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு: இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்கு Description: சாதி, இனம், மொழி மூலம் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை