தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - கவிஞர் வைரமுத்து

தமிழகம்
Updated Jun 18, 2019 | 17:57 IST | Times Now

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளாா்.

Poet and lyricist Vairamuthu, கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவை உறுப்பினர்களாக தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட தமிழக எம்.பிக்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

17-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று பதவியேற்ற நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்.பி.,க்கள் இன்று பதவியேற்றனர். அப்போது புதுச்சேரி எம்.பி., வைத்தியலிங்கம் உள்பட தமிழகத்தில் இருந்து தேர்வான அனைத்து எம்பிக்களும் தங்களின் பதவி பிரமாணத்தை தமிழில் எடுத்துக்கொண்டனர்.

தயாநிதி மாறன் (மத்திய சென்னை), கனிமொழி (தூத்துக்குடி), பார்த்திபன் (சேலம்), சு.வெங்கடேஷன்( மதுரை), பாரிவேந்தர் (பெரம்பலுர்), ரவிக்குமார் (விழுப்புரம்), ஜோதிமணி (கரூர்), ரவீந்திரநாத் குமார் (தேனி) ஆகியோர் பதவி பிரமாணத்தின் இறுதியில் "தமிழ் வாழ்க", "வாழ்க தமிழ்" என்ற முழக்கத்தை விடுத்தனர். இதனையடுத்து சமூகவலைதளங்களில் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட எம்.பிக்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:
 
நாடாளுமன்றத்தில் தமிழில் 
உறுதிமொழி ஏற்ற
தங்கங்களை வாழ்த்துகிறேன்.
நாம் எந்த மொழியையும் 
எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.
சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.
பயணிப்போம் - மொழி காக்க;
தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.

NEXT STORY
தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - கவிஞர் வைரமுத்து Description: நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளாா்.
Loading...
Loading...
Loading...