’தோல்விதான்..ஆனாலும் கணிசமான வாக்குகள் பாமவிற்கு கிடைத்துள்ளது’ - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை!

தமிழகம்
Updated May 26, 2019 | 18:33 IST | Times Now

தமிழகத்தில் பாமக, அதிமுக கூட்டாணியில் 7 இடங்களில் களமிறங்கியது. இறங்கிய எல்லா இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் நம் முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

tamil nadu, தமிழ்நாடு
பாமக நிறுவனர் ராமதாஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தலில் பாமக தோல்வியடைந்திருந்தாலும், கணிசமான வாக்குகளையே பெற்றுள்ளது என்று அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.

நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினதே தவிர எனக்குள் எந்த விதமான கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் மட்டும்தான். 

தமிழகத்தில் பாமக, அதிமுக கூட்டாணியில் 7 இடங்களில் களமிறங்கியது. இறங்கிய எல்லா இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் நம் முதல் இலக்கு.

மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன் மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத, போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத வி‌ஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கி ஏமாற்றியுள்ளன. 

மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம். வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

NEXT STORY
’தோல்விதான்..ஆனாலும் கணிசமான வாக்குகள் பாமவிற்கு கிடைத்துள்ளது’ - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை! Description: தமிழகத்தில் பாமக, அதிமுக கூட்டாணியில் 7 இடங்களில் களமிறங்கியது. இறங்கிய எல்லா இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் நம் முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
Loading...
Loading...
Loading...