மோடிக்கு பத்திரிகை வைத்த வேலூர் குடும்பம்! - மோடி என்ன செய்தார் தெரியுமா?

தமிழகம்
Updated Sep 09, 2019 | 16:05 IST | Times Now

பிரதமிடம் இருந்து வாழ்த்துமடல் பெற்ற ஆனந்தத்தில் திளைக்கும் ராஜசேகரன் குடும்பத்தினர் அக்கடிதத்தை ஃப்ரேம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

Modi sends greeting to Vellore couple, வேலூர் தம்பதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து மடல்
வேலூர் தம்பதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து மடல் 

வேலூர்: செப்டம்பர் 11-ஆம் தேதி தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருக்கும் வேலூரை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்திருக்கிறார். இதனையடுத்து பிரதமர் மோடி அத்தம்பதியருக்கு வாழ்த்துமடல் அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் மோடி கூறியதாவது: திரு மற்றும் திருமதி டி.எஸ். ராஜசேகரன் அவர்களே, டாக்டர் சுதர்சன் அவர்களுடன் தங்களது மகள் டாக்டர் ராஜ்ஸ்ரீ திருமணம் நடக்கவிருக்கும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்க இருக்கும் அவர்களது பயணம் வளமும் நல்ல அனுபவங்களும் நிறைந்தவையாக இருக்க வேண்டி பிரார்த்திக்கிறேன். அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தங்களுக்கு கடிதம் அனுப்புவார் என எதிர்ப்பார்க்கவில்லை என்று ராஜசேகரன் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிரதமிடம் இருந்து வாழ்த்துமடல் பெற்ற ஆனந்தத்தில் திளைக்கும் ராஜசேகரன் குடும்பத்தினர் அக்கடிதத்தை ஃப்ரேம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...