ப்ளஸ் 2 தேர்வு முடிவு: புதுச்சேரி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் இதுதான்!

தமிழகம்
Updated Apr 19, 2019 | 16:55 IST | Times Now

புதுச்சேரியில் தேர்வெழுதிய மாணவர்களில் 92.94 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவு, மாணவ, மாணவிகள், தேர்வு சதவிதம், புதுச்சேரி, தமிழ்நாடு,  tamil nadu, puducherry, plus two result, students, exam result,
ப்ளஸ் 2 தேர்வு முடிவு  |  Photo Credit: Times Now

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 908 மாணவர்கள், 7 ஆயிரத்து 786 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 694 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்தன. இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் தேர்வெழுதிய மாணவர்களில் 92.94 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 908 மாணவர்கள், 7 ஆயிரத்து 786 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 694 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இத்தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 657 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 236, மாணவிகள் 7 ஆயிரத்து 421. தேர்வு எழுதிய மாணவர்களில் 92.94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.

புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 677 மாணவர்கள், 3 ஆயிரத்து 754 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 431 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 91 மாணவர்கள், 3 ஆயிரத்து 415 மாணவிகள் என 5 ஆயிரத்து 506 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.62 ஆகும்.

புதுவை, காரைக்காலில் தனியார் பள்ளிகளில் 4 ஆயிரத்து 231 மாணவர்கள், 4 ஆயிரத்து 32 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 263 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 145 மாணவர்கள், 4 ஆயிரத்து 6 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 151 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.64 ஆகும். பிராந்தியம் வாரியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதுவையில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.71 சதவீதம் அதிகம்.

காரைக்காலில் 88.16 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.13 சதவீதம் அதிகம். பிராந்தியம் வாரியாக அரசு பள்ளிகளில் புதுவையில் 86.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 12.84 சதவீதம் அதிகம். காரைக்காலில் 84.14 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 8.25 சதவீதம் அதிகம். புதுவை பகுதியில் 53 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. காரைக்காலில் 4 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

NEXT STORY
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: புதுச்சேரி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் இதுதான்! Description: புதுச்சேரியில் தேர்வெழுதிய மாணவர்களில் 92.94 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.
Loading...
Loading...
Loading...