மதுரை: வகுப்பறையில் +1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தமிழகம்
Updated Sep 06, 2019 | 12:41 IST | Mirror Now

வீட்டில் இருந்து புடவையைக் கொண்டு வந்த மாணவி, தனது வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

plus one girl hanged in Madurai school class room
மதுரை மாணவி பள்ளியில் தூக்கிட்டுத் தற்கொலை  |  Photo Credit: Getty Images

மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் இந்த மாணவி. கடந்த ஒரு வாரமாக இவர் உடல் நலமின்மையால் பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது, இன்று தனது தாயின் புடனையையும் பள்ளி பேகில் எடுத்து வந்தவர், சுமார் 8 மணி அளவில் அவரது வகுப்புக்குச் சென்றுள்ளார். 

அப்போது தனது வகுப்பறையில் உள்ளே தாழிட்டவர், தான் கொண்டு வந்த புடவையைக் கொண்டு வகுப்பின் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பள்ளிக்கு இயல்பாக 8.45 மணிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறை உள்ளே தாழிட்டு இருப்பதைப் பார்த்து ஜன்னலைத் திறந்தபோதுதான் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

உடனே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கூறியதும், பள்ளி நிர்வாகம் போலீஸுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே போலீஸாரும் மாணவியின் பெற்றோரும் பள்ளிக்கு வந்துள்ளனர். பிரச்னை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை விடுத்துள்ள நிர்வாகம் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்கள் மட்டும் உள்ளே இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மாணவியின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகை இட்டதால் அங்கே போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.தற்போது மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...