மே 8ம் தேதியன்று வெளியாகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழகம்
Updated Apr 18, 2019 | 22:00 IST | Times Now

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,000 மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.

exam results, தேர்வு முடிவுகள்
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: தமிழகம் முழுவதும் வருகின்ற மே 8ம் தேதியன்று 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி நடைபெற்றது. 10ம் வகுப்பிற்கு மார்ச் 14ம் தேதி துவங்கி 29ம் தேதி வரயிலும், 11ம் வகுப்பு மார்ச் 6ம் தேதி துவங்கி மார்ச் 22ம் தேதி வரையிலும், பிளஸ் 2விற்கு மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,000 மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.

இந்நிலையில் வருகின்ற மே 8ம் தேதியன்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இம்முடிவுகளை கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in, dge.tn.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

மேலும், ‘TN HSE Results' என கூகுள் ப்ளே ஸ்டோர்ல் சர்ச் செய்து ஆப்-பை பதிவிறக்கம் செய்து அதன்மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

NEXT STORY
மே 8ம் தேதியன்று வெளியாகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்! Description: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,000 மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.
Loading...
Loading...
Loading...