சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தமிழகம்
Updated May 20, 2019 | 09:01 IST | Times Now

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

Petrol, diesel prices increased on Monday
Petrol, diesel prices increased on Monday  |  Photo Credit: BCCL

சென்னை: நேற்றைய விலையை விட பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகளும் உயர்ந்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்  செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. 

அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.73.82 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.69.88 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. 

NEXT STORY
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு Description: மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.
Loading...
Loading...
Loading...