தேர்தல் முடிந்தது... பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது

தமிழகம்
Updated May 21, 2019 | 07:59 IST | Times Now

பெட்ரோல், டீசல் விலையில் இன்று (21.05.2019) சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Petrol, diesel prices hiked on Tuesday
Petrol, diesel prices hiked on Tuesday   |  Photo Credit: BCCL

சென்னை: சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகளும் உயர்ந்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்  செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தினம்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிா்ணயித்து வருகின்றன.  

அதன்படி, தினம்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகளும் உயர்ந்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.87 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.97 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், தேர்தலையொட்டி சில தினங்கள் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
NEXT STORY
தேர்தல் முடிந்தது... பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது Description: பெட்ரோல், டீசல் விலையில் இன்று (21.05.2019) சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை