நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? மு.க.ஸ்டாலினை மீண்டும் சீண்டிய ராமதாஸ்

தமிழகம்
Updated Oct 19, 2019 | 16:50 IST | Times Now

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்குத் தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின்.

DMK president Mk Stalin and PMK Founder DR.Ramadoss
திமுக தலைவர் மு.க.ஸ்டான் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் 

சென்னை: நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? என ஸ்டாலினுக்கு பாமக நிறூவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனுக்கும், நடிகர் தனுஷூக்கும் ட்விட்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா். மேலும்,  "அசுரன் திரைப்படம் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்" எனத் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

இதையடுத்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த ராமதாஸ், "முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்," எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின், "முரசொலி அலுவலகத்தின் பட்டாவை தனது ட்வீட்டரில் பதிவிட்டு இது தனியாருக்கு சொந்தமான நிலமென்றும் மருத்துவர் ராமதாஸ் பச்சையாக புளுகியிருக்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால்,  அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?" என்று ராமதாஸின் ட்வீட்டுக்கு காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். மேலும், அந்தப் பதிவுடன், முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவை ஸ்டாலின் இணைத்திருந்தார்.

இந்நிலையில், ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985 ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்குத் தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? ஆதவற்றோர் இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை," என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளாா். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...