முடிவுக்கு வரும் தென்மேற்கு பருவமழை; தொடங்குகிறது வடகிழக்கு பருவ மழை

தமிழகம்
Updated Oct 13, 2019 | 15:09 IST | Times Now

வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Northeast Monsoon
Northeast Monsoon  |  Photo Credit: Getty Images

தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து முடிவுக்கு வரும் வேளையில் வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு கிழக்கு திசையில் காற்று வீச துவங்கி உள்ளதாகவும் இதனால் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மழை பெய்து இருப்பதாகவும் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்தில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவித்த அவர், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது, ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லாமல் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும் என்று தெரிவித்த அவர்... இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை சுமார் 44 சென்டிமீட்டர் அளவுக்கு தமிழகத்துக்கு மழையை தர வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...