இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை - கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு

தமிழகம்
Updated Oct 10, 2019 | 16:54 IST | சு.கார்த்திகேயன்

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

Puthiya Thamilagam leader Dr K. Krishnasamy
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி   |  Photo Credit: Facebook

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இன்று தெரிவித்துள்ளாா். 

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம்காண்கின்றன. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட குழு நாங்குநேரியில் முகாமிட்டுள்ளது. 

இதற்கிடையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 சமூகங்களை ஒருங்கிணைத்து `தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கவில்லை என்று கூறி நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடாததால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று கூறினார். மேலும், 
அதிமுக அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அதிமுகவை நம்பி ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தார். 
 
மக்களவைத் தேர்தலில் அதிமுக,  பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை - கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு Description: தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்