5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு; தற்போதைய நிலையே தொடரும்: செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகம்
Updated Sep 17, 2019 | 22:11 IST | Times Now

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Minister Sengottaiyan, அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்   |  Photo Credit: Twitter

ஈரோடு: தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், "11,12-ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5-ஆக குறைக்க முதல்வருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சீருடைகள், காலணிகள் வழங்கப்படும். 

5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தேர்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

NEXT STORY