நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு; குமரிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

தமிழகம்
Updated Aug 14, 2019 | 14:57 IST | Times Now

குமரிக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசுவதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Nilgiris, Coimbatore and Theni could receive heavy rains
நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு  |  Photo Credit: Twitter

சென்னை: நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புவியரசன், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், தெற்கு மட்டும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

”கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 8 செ.மீ. மழையும் வால்பாறையில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்,” என்று தெரிவித்தார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசுவதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

NEXT STORY
நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு; குமரிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் Description: குமரிக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசுவதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...