கோவையில் 7 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழகம்
Updated Jun 12, 2019 | 11:39 IST | Times Now

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

NIA raids 7 places in Coimbatore
கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை  |  Photo Credit: ANI

கோவை: கோவையில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென இன்று சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோவை உக்கடத்தில் உள்ள அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் இந்த சோதனை நடக்கிறது. இதேபோல் குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் உள்பட 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்களில் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

NEXT STORY