கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - இளைஞரிடம் தீவிர விசாரணை

தமிழகம்
Updated Jun 16, 2019 | 09:45 IST | Times Now

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் நேற்று நள்ளிரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai news, மதுரை செய்திகள்
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

மதுரை: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்திலும் தொடர் சோதனை நடைபெற்று வருகின்ற நிலையில், கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த சிலர் அவர்களுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருப்பது புலனானது.

இதையடுத்து கடந்த 12 ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன் உள்பட 7 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இதையடுத்து ஷாஜகான், முகமது உசேன், ‌ஷபியுல்லா ஆகியோர் மீது போத்தனூர் போலீசார் சட்ட விரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மூவரும் வருகிற 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் நேற்று நள்ளிரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

NEXT STORY
கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - இளைஞரிடம் தீவிர விசாரணை Description: மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் நேற்று நள்ளிரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles