சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை!

தமிழகம்
Updated Jun 18, 2019 | 18:35 IST | Times Now

சென்னை புழல் சிறையில் உள்ள பன்னா, இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை  |  Photo Credit: YouTube

சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள பன்னா, இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை 4 மணி நேரம் வரை நடைபெற்றதாகவும், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மற்றும் மதுரையைத் தொடர்ந்து தற்போது புழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

கோயம்புத்தூர் நகரின் 7 க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்தவாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்குப்பின் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படை தீவிரவாதி ஜகரன் ஹசிமின் தீவிர ஆதரவாளர்கள் இவர்கள் எனக் கூறப்படுகிறது. 

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் சனிக்கிழமை அன்று நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒருவரான முகமது அசாருதீன் என்கிற முகமது ஹூசைன் இந்த குழுவுக்கு முளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ஹாஜகான், சபியுல்லா எனத் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சில இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, இன்று சென்னை புழல் மத்திய சிறையில் 4 பேர் அடங்கிய என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை புழல் சிறையில் உள்ள பன்னா, இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படை தாக்குதலில் வெளிநாட்டினர் 45 பேர் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.

NEXT STORY
சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை! Description: சென்னை புழல் சிறையில் உள்ள பன்னா, இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles