மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொதுச் செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழகம்
Updated Aug 14, 2019 | 17:52 IST | Times Now

தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

MNM chief Kamal Hassan, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்கள் நீதி மய்யத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய பொதுச் செயலாளர்களை அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடைய பொதுச் செயலாளர் அமைப்பு -வடக்கு மற்றும் மேற்கு என்று இரண்டு பதவிகள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குசாவடி வரை சென்றடைய பொதுச்செயலாளர் - ஒருங்கிணைப்பு என்கின்ற பதவி உருவாக்கப்படுகிறது. இத்துடன் பொதுச்செயலாளர் - கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர் - சார்பு அணிகள், பொதுச்செயலாளர் - தலைவர் அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைபடுத்திடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

MNM General Secretaries

புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இதன் முதற்கட்டமாக கீழ்கண்டவர்கள் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அதன்படி, பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளர்யா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச் செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாக்டர் மகேந்திரன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தற்பொழுது தாங்கள் வசித்து வரும் பொறுப்புகளில் முறையே, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராகவும் பொருளாளராகவும் தொடர்ந்து செயல்படுவார்கள் எனவும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய பொதுச் செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு Description: தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...