நீட் தேர்வு மசோதாக்கள்.. சி.வி.சண்முகம் பதவி விலக தயாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகம்
Updated Jul 10, 2019 | 14:20 IST | Times Now

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

M.K.stalin
M.K.stalin  |  Photo Credit: Twitter

சென்னை:  நீட் தேர்வு மசோதாக்கள் குறித்து தவறான தகவலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு நிறைவேற்றிய 2 மசோதாக்களை மத்திய அரசு  நிராகரித்துவிட்டது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது. முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பி இருக்கலாம். தற்போது தாமதத்தால் மசோதாக்களை மீண்டும் அனுப்பும் வாய்ப்பையும் இழந்திருக்கிறோம். தவறான தகவலை சொல்லியதற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விவகாரத்தில் நான் எந்த தவறான தகவலும் கூறவில்லை. நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நான் கூறியது தவறு என்றால் பதவி விலகத் தயார். உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாரா என கேள்வி எழுப்பினார். அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையில் தமிழகத்தில் மேலும் 3 புதிய சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110 விதியின் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக ரூ 9.58 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் இந்த கல்லூரிகள் 2019-2020 -ம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

NEXT STORY
நீட் தேர்வு மசோதாக்கள்.. சி.வி.சண்முகம் பதவி விலக தயாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி Description: நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles