சென்னை, மதுரை, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகம்
Updated Jul 20, 2019 | 10:19 IST | Times Now

தமிழகத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NIA raids in Tamil Nadu
NIA raids in Tamil Nadu  |  Photo Credit: ANI

சென்னை: தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி நெல்லை, மேலப்பாளையம் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுரை நரிமேட்டில் முகமது ஷேக் மொய்தீன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை காரணமாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல், தேனி மாவட்டம், கோம்பை பகுதியில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் சென்னையில் கொத்தாவால் சாவடியைச் சேர்ந்த தவ்ஃபிக் முகமது என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  தேசிய புலனாய்வு முகமையின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் சமீபத்தில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவர் சையது முகமது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...