நாளை பரோலில் நளினி வெளிவருகிறாரா?!

தமிழகம்
Updated Jul 22, 2019 | 13:55 IST | Times Now

நளினி நாளை பரோலில் வெளியே வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நளினி
நளினி  |  Photo Credit: Twitter

ராஜீவ் காந்தியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 7 பேரில் நளினியும் முருகனும் அடக்கம். இருவரும் கைதானபோது புதுமணத் தம்பதியினர். நளினி 5 மாதம் கர்ப்பம். நளினிக்கு சிறையிலேயே பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு ஹரித்ரா என்று பெயர் வைத்த தம்பதி, தங்களுடன் அவளும் சிறையில் இருக்க வேண்டாம் என ஹரித்ராவுக்கு இரண்டரை வயது இருக்கும்போது தங்களது சக சிறைவாசியான சுசீந்திரனின் தாயிடம் ஒப்படைத்தனர். ஹரித்ரா அவருடன் கோவை, ஈழம் என வளர்ந்தவர், பின் லண்டனுக்கு சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டலின் டாக்டராக உள்ளார். அவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு உள்ளது.

இதனால் நளினி தனது மகள் திருமணத்துக்காக தன்னை 6 மாத காலம் பரோலில் வெளியே விடும்படி மனு அளித்திருந்தார். ஜூலை 5ஆம் தேதி அவருக்கு ஒரு மாத காலம் மட்டும் பரோலில் வெளியே இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறையில் இருந்த 28 ஆண்டுகளில் ஒரு மாத காலம் பரோல் கிடைத்தது இதுவே முதல் முறை. இதற்கு முன்னால் நளினியின் தந்தை இறந்தபோது 12 மணிநேர பரோலில் 2016ஆம் ஆண்டு வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்படி நாளை நளினி வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத காலத்துக்கு பரோலில் வெளியே வருகிறார். நளினி வெளியே வந்தபிறகு உறவினர்களுடன் வேலூரிலேயே தங்க இருக்கிறார் என்று ஐ.இ.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தங்குவதற்கு வேலூரில் வீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாக இதில் கூறப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது மகளை நளினி சந்திக்கவிருக்கிறார்.

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...