4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகம்
Updated Apr 24, 2019 | 13:26 IST | Times Now

நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Naam Tamilar party seeman, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  |  Photo Credit: Twitter

சென்னை: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார்.  

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக, மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலும் நேற்று தொடங்கிவிட்டது. 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார். மேலும், மே- 19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்கண்டவர்கள் "விவசாயி" சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

சூலூர் - வெ.விஜயராகவன் 

அரவக்குறிச்சி - பா.க.செல்வம்

திருப்பரங்குன்றம் - ரா.ரேவதி

ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா 

கடந்த 18-ம் தேதி நடந்து முடிந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50 சதவிதம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே இந்த 4 தொகுதி இடைத்தேர்தலிலும் இரண்டு தொகுதியில் பெண் வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY
4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு Description: நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
Loading...
Loading...