உணவில் புழு... முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

தமிழகம்
Updated Sep 10, 2019 | 18:34 IST | Times Now

பிரபல சைவ உணவகமான முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து, Murugan Idli shop license cancelled temporarily
முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து  |  Photo Credit: Twitter

சென்னை: உணவில் புழு இருந்தாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முருகன் இட்லி கடையின் உணவு தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். 

பிரபல சைவ உணவகமான முருகன் இட்லி கடை சென்னையில் 23 கிளைகளை கொண்டது. இதன் உணவு தயாரிக்கும் கூடம் அம்பத்தூரில் அமைந்துள்ளது. அங்கிருந்து உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு கிளைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 7-ஆம் தேதி பாரிமுனையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள முருகன் இட்லி கடை கிளையில் வழக்கறிஞர் பிரபாகரன் என்பவரின் உணவில் புழு இருந்துள்ளது. அவர் அதனை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி புகார் அளித்துள்ளார். 

பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அம்பத்தூரில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று  ஆய்வு செய்தனர். அங்குள்ள உணவு பொருட்கள், மற்றும் கூடத்தின் சுகாதாரத்தை சோதனை செய்த பின்னர் முறையாக உணவு கூடத்தில் சுகாதாரம் கடைபிடிக்கப்படவில்லை என்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகளை பின்பற்றவில்லை என்றும் நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும் அந்த உணவு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Murugan Idli Shop

மேலும் முருகன் இட்லி கடை நிறுவனம் முறையாக குறைபாடுகளை சரிசெய்யும் பட்சத்தில் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என்றும் தெரியவருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு இதே போல உணவு துறை அதிகாரிகள் பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இதே போல போதுமான சுகாதாரம் பின்பற்றாததால் கடையின் உரிமையை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...