”சுர்ஜித்தை காப்பாற்றுங்கள்” - தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை பிரார்த்தனை

தமிழகம்
Updated Oct 26, 2019 | 12:10 IST | Times Now

”அஜாக்கிரதை, அலட்சியம் - இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு” - நடிகர் விவேக்

MK Stalin, Actor Vivek, Ramadoss, மு.க.ஸ்டாலின், நடிகர் விவேக், இராமதாசு
மு.க.ஸ்டாலின், நடிகர் விவேக், இராமதாசு  |  Photo Credit: Twitter

சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தை சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டி சமூக வலைதளங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டில் கூறியதாவது: “மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்!” இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

பாமக நிறுவனர் ச.இராமதாஸ் ட்விட்டா் பதிவில், "திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணறுக்காக போடப்பட்ட துளையில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை விழுந்து சிக்கிக் கொண்டதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது. மீட்புக்குழுவினர் விரைவாகவும், விவேகமாகவும் செயல்பட்டு அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டும்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளாா்.

 

 

”மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித், நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

 

 

நடிகர் விவேக் தனது ட்வீட்டில் கூறியதாவது: ”சுஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை, அலட்சியம் - இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.” இவ்வாறு நடிகர் விவேக் பதிவிட்டுள்ளாா்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...