முக ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவருகிறார்: தமிழிசை தகவல்!

தமிழகம்
Updated May 14, 2019 | 13:46 IST | Times Now

திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சியுடனும் பேசிவருவதாக தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்புத் தகவல்.

முக ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவருகிறார்: தமிழிசை தகவல்
முக ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவருகிறார்: தமிழிசை தகவல்  |  Photo Credit: Twitter

தூத்துக்குடி: திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சியுடனும் பேசிவருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி தொகுதியில் நிச்சயம் தாமரை தான் மலரும் எனத் தெரிவித்துள்ளார். தப்புக்கணக்கு போடுவதற்கு தமிழகத்தில் ஒரு தலைவர் உண்டென்றால் அது ஸ்டாலின் தான் என்றும், பாஜகவுடன் பேச மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருவது உண்மைதான் என்றும் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் ராகுலை முதலில் பிரதமர் எனத் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று சந்திரசேகரராவிடம் பேசினார் என்றும், மறுபுறம் மோடியுடனும் பேசுகிறார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார். முகஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார் என்றும் பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் சோதனைகள் நடத்தப்படுவது வாடிக்கை தான் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று முக ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். இந்நிலையில், இன்று காலை முக ஸ்டாலின் தங்க உள்ள விடுதி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும், முக ஸ்டாலினின் பிரச்சார வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, பாரதிய ஜனதாவுடன் முக ஸ்டாலின் பேசிவருவதாக தமிழசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ள கருத்துக்கு, திமுக வைச்  சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மறுப்புத் தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் உளறிவருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

NEXT STORY
முக ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவருகிறார்: தமிழிசை தகவல்! Description: திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சியுடனும் பேசிவருவதாக தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்புத் தகவல்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles