குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட்டி நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்

தமிழகம்
Updated Nov 15, 2019 | 15:29 IST | Times Now

சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட்டி, “தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin
MK Stalin  |  Photo Credit: Twitter

தமிழக சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை உடனே கூட்டி, 'தமிழகத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நீட் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்று மருத்துவ கல்வியில் சேர்ந்தவர்களில் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே அதிகம் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகும் நீட் தேர்வினை தற்போதைய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பி பத்து நாட்கள் மேலான நிலையிலும் அதிமுக அரசு மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் சொல்லாமல் வழக்கம்போல மௌனம் காப்பது கடும் கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சியில் இருந்தவரை ஏழை எளிய நடுத்தர வகுப்பு மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வினை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தியவர் முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் தன் முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்குடன் அவசர அவசரமாக நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் மீது திணித்து  பல தற்கொலைகள் வைக்க விட்டது அதிமுக அரசு

 தற்கொலைகளும் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்து மருத்துவ கல்லூரிகளில் நீட் பயிற்சி மையத்தில் சேராமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ஒரு கூட இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3200 மருத்துவ இடங்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1650 சீட்டுகளில் 52 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் சேர்ந்துள்ளார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் அதிமுக அரசே உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது… எப்படி அந்த அறிக்கை நீள்கிறது.

மேலும் அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பபட்டும், அந்த மசோதக்களை உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்பியது மத்திய பாஜக அரசு. திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்பதைக் கூடச் சொல்வதற்கு அஞ்சி புதுப்புது வினோதமான சட்ட அர்த்தங்களைக் கூறி, அரசியல் சட்டம் புரிந்த வல்லுனர்களையே திணற வைத்தது அதிமுக அரசு.

இது குறித்து எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கேட்டபோது மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் கேட்டிருக்கிறோன் என்று விதண்டாவாதம் செய்தார்கள். ஆகவே இதுவரை நீட் தேர்வில் அடித்த கூத்துகள் - குழப்பங்கள் - மத்திய பாஜக அரசின் சமூக நீதி விரோதப் போக்கிற்கு முதலமைச்சர் மனப்பூர்வமான ஒத்துழைப்பு நல்கி தமிழக மாணவர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம் போதும். இப்போது உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதிமுக திருந்த வேண்டும்.

தமிழக மக்களை இனியும் ஏமாற்றாமல் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரினைக் கூட்டி, அதில் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலை பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் கொடிய நீட் தேர்வு அடுத்து வருவதற்குள், இப்போதே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

NEXT STORY