பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்- முக ஸ்டாலின்!

தமிழகம்
Updated May 14, 2019 | 17:25 IST | Times Now

பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என முக ஸ்டாலின் அறிக்கை

நிரூபிக்க தயாரா என முக ஸ்டாலின் சவால்
நிரூபிக்க தயாரா என முக ஸ்டாலின் சவால்  |  Photo Credit: Twitter

சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிரூபிக்கா விட்டால் பிரதமர் மோடியும், தமிழிசை சவுந்தரரானும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தது திமுக தான் என்று தெரிவித்தார். பச்சைப்பொய் நிறைந்த பேட்டியை வெளியிட்ட தமிழிசை சவுந்தரரானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அவர், தோல்வியின் விழிம்புக்குச் சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவது கைதேர்ந்த கலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் பொய் பேட்டி அளித்திருப்பதற்காக வருத்தப்படுவதாகவும் அறிக்கையில் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சியுடனும் பேசிவருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தூத்துக்குடியில் பேட்டியளித்திருந்தார். 
 

NEXT STORY
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்- முக ஸ்டாலின்! Description: பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என முக ஸ்டாலின் அறிக்கை
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles