நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம்
Updated Aug 13, 2019 | 13:14 IST | Times Now

நீலகிரியில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

MK Stalin
மு.க ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

நீலகிரி: நீலகிரியில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய்.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் அப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில இடங்களில்  நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா மற்றும் திமுக-வை சேர்ந்த பலரும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும், இனியாவது தமிழக அரசு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைவாக செய்ய வேண்டுமென கூறினார் .மேலும் நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு  திமுக எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 கோடியும், சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ. 2 கோடியும் சேர்த்து ரூ. 10 கோடி வழங்கப்படுமென மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு நீலகிரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, போர்கால அடிப்படையில் பாதிப்புகளை சரிசெய்ய முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

 

 

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமானதால் நீலகிரி பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மழை பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும் பல்வேறு காட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நிவாரண பணி தற்போது நடைபெற்று வருகிறது.     

NEXT STORY
நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க ஸ்டாலின் அறிவிப்பு Description: நீலகிரியில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...