சீன அதிபர் சென்னை வருவதை உறுதி செய்தது மத்திய உள்துறை அமைச்சகம்

தமிழகம்
Updated Oct 09, 2019 | 11:45 IST | Times Now

இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xi Jinping with Narendra Modi, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: Twitter

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் நாளை மறுநாள் அதாவது 11, 12 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்னையில் நடைபெறும் சந்திப்பில் பங்கேற்க இருப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளது.

இச்சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து மோடி, ஜின்பிங் ஆகியோர் ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா நாடுகள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. அலுவல் ரீதியான சந்திப்பு இது கிடையாது என்பதால் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2018 ஏப்ரல் 27, 28 தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை பிரதமர் மோடி மற்ரும் சீன அதிபர் இணைந்து பார்வையிட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...