சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர மாற்று ஏற்பாடு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தமிழகம்
Updated Jun 18, 2019 | 19:26 IST | Times Now

நெருக்கடியான சூழலில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Minister SP Velumani review in  water scarcity
அமைச்சர்கள் ஆய்வு, தாமரைப்பாக்கம்  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பருவ மழை பொய்த்து போனதால் ஆறு, குளங்கள், ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனால் தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றன. குடிநீருக்காக இரவு பகல் என காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் அலுவலங்களை மூடிவிட்டு, ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் அமைச்சர்கள் மாஃபா. பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் 200 விவசாயக் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து ஏற்கனவே எடுப்பதைவிட கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு வழங்கப்படுகிறது. குடிநீர் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட 13 ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். மேலும், பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

NEXT STORY
சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர மாற்று ஏற்பாடு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி Description: நெருக்கடியான சூழலில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...