கல்வி கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாசல்

தமிழகம்
Updated Jul 15, 2019 | 18:20 IST | Times Now

புதிய கல்விக் கொள்கை பற்றி ஒன்றும் தெரியாமல் நடிகர் சூர்யா பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

Minister Kadambur Raju
Minister Kadambur Raju  |  Photo Credit: ANI

தூத்துக்குடி: புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் ? என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 

அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, மும்மொழி கல்விக் கொள்கை குறித்து தனது கருத்துக்களை முன் வைத்தார். மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதை எப்படி சமாளிப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய சூர்யா,  நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும். எனவே புதிய தேசியக் கல்வி கொள்கை மீதான ஆலோசனைகள், மாற்றங்களை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் என அத்தனை பேரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் எனக் கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சூர்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால், ஒன்றுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும் என்றார்.

NEXT STORY
கல்வி கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாசல் Description: புதிய கல்விக் கொள்கை பற்றி ஒன்றும் தெரியாமல் நடிகர் சூர்யா பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola